• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு

November 16, 2020 தண்டோரா குழு

கோவையில் இதுவரை போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை 6 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்தும் வகையில் போக்சோ சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருகின்றன.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு மாநில அரசு 4 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை 2012 ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

தற்போது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அவருக்கு இழப்பீடாக ரூபாய் 7 லட்சம் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவருக்கு ரூபாய் 10 லட்சமாக மாநில அரசு உயர்த்தியுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தாள் இழப்பீட்டுத் தொகை குடும்பத்தினரிடம் வழங்கப்படும். வழக்கு விசாரணைக்கு வரும் போது பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரணை அதிகாரி மாவட்ட சட்ட சேவை ஆணையத்தின் முன் ஆஜர்படுத்த இதன்பின் இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும். தீர்ப்பைத் தொடர்ந்து மீதமுள்ள தொகையை வழங்கப்படும்.

போலீசார் கூறுகையில்,

கோவை மாநகரில் 2019 – ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் 92 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2012 2020 செப்டம்பர் வரை 180 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.மாவட்டத்தில் இதுவரை 6 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.இதுவரை 45 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க மாநில அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

மேலும் படிக்க