September 24, 2021
தண்டோரா குழு
போக்குவரத்து சிக்னலில் நின்றிருந்த பெண்ணிடம் திருநங்கை ஒருவர் பணம் கேட்டு பிரச்சனை செய்துள்ளார். கோவையில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை எழுந்துள்ளது.
கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் போது அங்கு வரும் திருநங்கைகள் அவர்களிடம் பணம் கேட்கின்றனர்.அவ்வாறு வாகன ஓட்டிகள் பணம் கொடுக்க மறுத்தால், சில திருநங்கைகள் அவர்களை தரக்குறைவாக பேசுவதும், ஆபாச செய்கைகள் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், இன்று காலை கோவை உப்பிளிபாளையம் சிக்னலில் தனது வாகனத்தில் காத்திருந்த பெண் ஒருவரிடம் திருநங்கை ஒருவர் பணம் கேட்டுள்ளார்.அதற்கு அந்த பெண் மறுக்கவே, திருநங்கை அவரை தரக்குறைவாக பேசினார்.இதனால் ஆத்திரமடைந்த பெண், சிக்னலிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு திருநங்கையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்களை தொந்தரவு செய்யும் திருநங்கையை கைது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த போலீசாரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் இருவரையும் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். கோவை மாநகரில் பல சிக்னல்களில் திருநங்கைகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற செயல்களைல் ஈடுபடுவோர் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.