January 8, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் ஆட்சியர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஹோட்டல்கலில் விலைபட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். கோவையில் அனைத்து தெருக்களிலும் பெயர்பலகை வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செயப்பட்ட நீர்வழி ஓடைகள் மீட்கப்பட வேண்டும். அன்னூர், சூலூர் வட்டங்களில் நில அளவை செய்ய தொகை செலுத்தினாலும் உடனடியாக நில அளவை செய்வதில்லை. மாநில மற்றும் மாநகராட்சி நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வாரசந்தைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். திருச்சி சாலையில் வசந்தாமில் முதல் ஒண்டிப்புதூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறபடுத்த வேண்டும். நீலம்பூரில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலர் லோகு உள்ளிட்ட பல்வேறு தன்னார்வளர்கள் கலந்து கொண்டனர்.