• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போகி பண்டிகையால் சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசு அதிகரிப்பு

January 13, 2018 தண்டோரா குழு

போகி பண்டிகையால் சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

போகி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலையில் பழைய பொருள்களை ஆங்காங்கே எரித்தனர். இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகள் புகை மூட்டமாகவே காணப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளிலும், முக்கிய சாலைகளிலும் எதிரே வரும் வாகனம் தெரியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பனி மூட்டமும் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போகி பண்டிகையால் சென்னையில் 13 மண்டலங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். அதிகப்பட்சமாக விருகம்பாக்கத்தில் காற்றை சுவாசிக்கும் போது நுண்துகள்களின் அளவு 386-ஆக இருந்தது. கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியன அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் குறைவாக இருந்தது. குறைவான வெப்பநிலை, குறைந்த காற்றின் வேகத்தால் காற்றில் நுண்துகள்கள் ஒரே இடத்தில் நிலைக்கொண்டிருந்தன என்று வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க