October 21, 2021
தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோரை போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர்களை மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் விதிமுறைகளை மீறி அவர்களின் உறவினர்களை சந்திக்க காவல்துறையினர் அனுமதித்தனர்.
இந்நிலையில்,விதிமுறைகளை மீறி அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டுள்ளார்.