January 6, 2021
தண்டோரா குழு
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மாலை இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
மூவரையும் கோவை மத்திய சிறையில் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். இதற்கிடையில், இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில், ஏற்கனவே இரண்டு பெண்கள் சிபிஐ அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண் ஆசிரியர் ஒருவர்நீதிபதியிடம் அளித்த வாக்குமூலம் தான் இவர்கள் மூவரும் சிறை செல்ல காரணமாக இருந்தது. அவர் தனது வாக்குமூலத்தில் கைதான மூவரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அதை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார்.