• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – சக மாணவர் மீது வழக்கு பதிவு

September 5, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக மாணவர் மீது இரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி (21) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 29ம் தேதி கல்லூரியில் இருந்து 36 மாணவர்கள்,6 மாணவிகள், 2 ஆசிரியர்கள் உட்பட 44 பேர் மங்களூருக்கு தொழில் சுற்றுலாவுக்காக சென்றனர். கோவை இரயில் நிலையத்தில் இருந்து மங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு சென்றதாகவும், அப்போது, சக மாணவனான தங்கபாலன்(21) நெருக்கமாக வந்து பக்கத்தில் நிற்பதும், மேலே வந்து உராசுவதும் இதுகுறித்து எச்சரித்தும் பின்னர், மங்களூரில் பேருந்தில் பயணித்த போதும் இதுபோன்ற செயலில் ஈடுப்பட்டதாகவும், மீண்டும் 3-ம் தேதி கோவைக்கு வரும் வழியில் தங்கபாலன் மதுபோதையில் தவறாக நடந்து கொண்டதாகவும் மாணவி டிக்கெட் பரிசோதகரிடம் புகார் தெரிவித்த போது, தங்கபாலனை கண்டித்து சொரனூர் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவி கோவை ரயில்வே இருப்புபாதை காவல்துறையினர் புகார் கொடுத்துள்ளார்.மாணவி அளித்த புகாரின் பேரில் ரயில்வே காவல்துறையினர் தங்கபாலன் மீது மானபங்க முயற்சி, பெண் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கு மங்களூர் போலிசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க