• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி என்.பி.டி. கிளையில் சக்தி நிதி நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட கிளை திறப்பு

March 10, 2022 தண்டோரா குழு

சக்தி பைனான்ஸியல் சர்வீசஸ் (எஸ்.எஃப்.எஸ்.எல்) நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட என்.பி.டி. கிளை 7.3.2022 அன்று திறக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

1998 ஆம் ஆண்டு முதல் நிதி தொடர்பான சேவைகளையும் , பாதுகாப்புப் பெட்டக வசதியையும் அளிக்கும் சக்தி நிதி நிறுவனம் , வாடிக்கையாளர்களின் நலனை கருதி பல கிளைகளை புதுப்பித்து பல நவீன வசதிகளை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி என்.பி.டி. கிளை நவீன வசதிகளுடன் இப்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிளையை டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி தாளாளர் ஹரிஹர சுதன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

மாறி வரும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல புதிய சேவைகளை அளித்து வரும் சக்தி நிதி நிறுவனத்தினை பாராட்டினார் .

கம்பெனியின் இயக்குநர் ஸ்ருதி பாலசுப்ரமணியம் பேசுகையில்,

சக்தி பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனம் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாதுகாப்பு பாதுகாப்பு வசதிகளை வழங்கி வருவதில் முன்னோடியாக திகழ்கிறது என்றார்.

நிறுவனத்தின் இயக்குநர் நைனன் வர்கீஸ் பேசுகையில் ,

சக்தி பாதுகாப்பு பெட்டக வசதி பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.24 மணி நேர பாதுகாப்பு , பயோ மெட்ரிக் வசதி, சி.சி.டி.வி.மோஷன் சென்சார், பல அளவுகளில் லாக்கர் வசதி,சுலபமான வேலை நேரம் போன்றவை அடங்கும். இன்றைய காலத்திகேற்ப மொபைல் போன் செயலி மூலம் முதலீடுகளை நிர்வகிப்பது, ஆன்லைன் மூலம் லாக்கர் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல புதிய வசதிகளும் உள்ளன என்று கூறினார்.

விழாவில் பொது மேளாலர் ஆனந்த் நஞ்சன் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க