• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி ஆழியார் அணை நிரம்பி வழிந்ததால் 7 மதகுகள் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

September 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தினால் நேற்றிலிருந்து அணை நிரம்பி வழிந்தது. ஆதலால் இன்று 7 மதகுகளில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.ஆதலால் கரையோரப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. உபரிநீர் திறப்பால் ஆழியார் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க