• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளிக் கட்டட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு–14 பேர் படுகாயம்

June 8, 2018 தண்டோரா குழு

பொள்ளாச்சி அருகே புதிதாக கட்டபட்டு வரும் தனியார் பள்ளியின் 2 வது மாடியின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்,பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள ஜமீன் முத்தூரில் தனியார் சொந்தமான 3 மாடி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.வழக்கம்போல் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் 30 மேற்பட்ட ஒடிசா மற்றும் கொல்கத்தா சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில்,2வது மாடியில் மேற்கூரையில் கம்பி கட்டும் பணி நடந்தது கொண்டிருந்த போது இன்று மாலை திடீரென்று அந்த பள்ளியின் கட்டிடமானது எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.

இதனால் மேல் கூரையின் கீழ் பணியில் இருந்த 15க்கும் மேற்பட்ட தொழிலாளர் மீது விழுந்ததில் அவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறினர்.பின்னர் அவர்களின் சத்ததை கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியோடு ஈடுபாடுகளில் சிக்கியவர்களைஒரு மணி நேரம் போராடி மீட்டு பொள்ளாச்சி அரசு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கண்ணா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.படுகாயம் அடைந்த 14 பேர் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்ற வருபவர்களை பொள்ளாச்சி சார்- ஆட்சியர் காய்திரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.இதையடுத்து,இந்த கட்டிடம் விழுந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க