• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சியில் 40 ஆண்டு பழைமையான புலித்தோல் பறிமுதல் – 6 பேர் கைது !

February 3, 2021 தண்டோரா குழு

பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் பகுதியில் புலி தோல் விற்க முயற்சித்த 6 பேரை கைது செய்த வனத்துறையினர் சிறையில் அடைத்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கள இயக்குனர் உத்தரவின் பேரில் ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி வனச்சரக சேத்துமடை பச்சத்தண்ணி பகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சாமியார் கோவில் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் புலித்தோல் ஒன்று விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.

இதனை அடுத்து வனச்சரகர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்கள் அசோக் நகர் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான ஐந்து நபர்கள் விசாரணை செய்து பொழுது காரின் பின்புறம் வெள்ளை நிற பையில் புலித்தோல் இருப்பது கண்டறியப்பட்டது இதையடுத்து வனத்துறையினர் 6 பேரை ஆனைமலை வனத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டதில் வேட்டைக்காரன் புதூர் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள ஜானகிராமன் கவுண்டர் என்பவர் தன் மகன் பிரசாந்த் கவுண்டர் வீட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலை பார்த்ததாகவும் அவரது வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் புலித்தோலை திருடி தனது வீட்டில் வைத்து உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறும் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் நேற்று பிடிபட்ட புலித்தோல் தனியாரால் பராமரிக்கப்பட்டு விற்பனைக்கு முயற்சித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தனியாருக்கு சொந்தமான வன விலங்குகளின் பொருட்கள் வைத்திருந்தால் வனத்துறை அலுவலகத்தில் லைசன்ஸ் புதுபித்து கொள்ள வேண்டும், லைசன்ஸ் அனுமதி இல்லாமல் இருந்தால் ஒரு வார காலத்துக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் இல்லை என்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி கடும் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க