June 17, 2021
தண்டோரா குழு
பொள்ளாச்சி அடுத்த ரெட்டியார் மடம் காவல்துறை சோதனை சாவடியில் காவலர்கள் இரவு நேர வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்பொழுது ஆம்னி வேன் நிறுத்தி சோதனை செய்ததில் அங்கலக்குறிச்சியை சேர்ந்த வசந்த் என்பவர் ஆம்னி வேனில் பதுக்கி வைத்திருந்த 63 மதுபாட்டில்களை ஆளியார் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் ஆம்னி வேனுடன் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக
என தெரியவந்தது.இதேபோன்று பொள்ளாச்சி நகர் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் 237 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாலாஜி மற்றும் மணிகண்டன் என்ற கேரளாவைச் சேர்ந்த இவர்களையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.