• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜுவல்லரி துவக்கம் !

April 1, 2022 தண்டோரா குழு

டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜுவல்லரியின் புதிய கிளை பொள்ளாச்சியில் இன்று துவங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி-கோவை சாலையில் தனிஷ்க் ஜுவல்லரியின் 45வது புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.இந்த புதிய கிளையை தனிஷ்க் ஜுவல்லரியின் ரீடெயில் தலைவர் விஜேஸ்ராஜன், தமிழக ரீடெயில் தலைவர் நரசிம்மன், அம்பாள் குரூப்ஸ் உரிமையாளரும், கிளை உரிமையாளருமானஅசோகன் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து தனிஷ்க் ஜுவல்லரியின் ரீடெயில் தலைவர் விஜேஸ்ராஜன், தமிழக ரீடெயில் தலைவர் நரசிம்மன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த நிறுவனம் டாடா நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். நாடு முழுவதும் 220 நகரங்களில் 385 கிளைகள் உள்ளன. தமிழகத்தில் 45 கிளைகள் உள்ளன. கோவை நகரி 2 கிளைகளும் பொள்ளாச்சியில் இந்த புதிய கிளையும் செயல்படுகிறது.3ஆயிரம் சதுரடி பரப்பளவில்,2 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிசைன்கள் எங்களிடம் உள்ளன. எக்ஸ்சேஞ்ச்க்காக வருபவர்களுக்கு 100 சதவீத தொகையை கொடுக்கிறோம்.

கிளை திறப்பின் அறிமுக சலுகையாக தங்க நகைகள் கிராமுக்கு ரூ.75 தள்ளுபடியும், வைர நகைகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.தங்கத்தின் தரத்தை அறியும் கேரட் மீட்டர்,தங்க நகைகளை சேமிக்கும் திட்டம், இலவச சர்வீஸ் வசதிகள் உள்ளன. தங்கம் நுகர்வில் தமிழகம் முதன்மையாக உள்ளது. எங்களது நிறுவனத்தின் 10 சதவீத விற்பனை தமிழகம் கொடுக்கிறது என்றனர்.

மேலும் படிக்க