• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் கும்கி யானை உதவியுடன் ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி

May 29, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் புகுந்து உயிர் பலி வாங்கிய ஒற்றை காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் தீவிர காட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள நவமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 24”ம்”தேதி இரவு புகுந்த காட்டு யானை ஒன்று ரஞ்சனா என்ற 7 வயது சிறுமியை தாக்கியத்தில் உயிரிழந்தார்.பின்னர் அடுத்த நாள் இரவு அதே குடியிருப்பு பகுதி புகுந்த அதே காட்டு யானை மாகாளி என்ற முதியவரை மிதித்து கொன்றது. இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகளை மக்கள் சிறைபிடித்து உயிர் பலி வாங்கும் யானை விரட்டி உயிர் பாதுகாப்பு அளிக்க வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, அட்டகாசம் செய்யும் காட்டு யானை விரட்ட டாப்சிலிப் யானை முகாமில் இருந்து பரணி மற்றும் சுயம்பு இரண்டு கும்கி யானைகளை வரவழைக்கபட்டது. பகல் நேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் அந்த யானை மாலைநேரத்தில் குடியிருப்பு பகுதியில் வருவதை தடுக்க வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து கும்கி யானை உதவியுடன் உயிர் பலி வாங்கிய யானையை வனத்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆக்ரோசமாக காணப்படும் அந்த யானை தொடர்ந்து குடியிருப்பு வரும் என்பதால் மலைவாழ் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர். மின்சாரம் இல்லாமல் குடிசையில் வாழ்ந்து வரும் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு அளிக்கும் அடிப்படை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க