• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கடன் திட்ட விழிப்புணர்வு முகாம்

March 3, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (யூ.ஒய்.ஈ.ஜி.பி), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) மற்றும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (பி.எம்.இ.ஜி.பி) ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில் பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தகுதிவாய்ந்த தொழில் முனைவோர்கள் புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ்,குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலை பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் வரும் பட்சத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே புதிய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க