June 23, 2018
தண்டோரா குழு
நீலகிரி மாவட்ட உதகை அழகாபுரி ஹோட்டலில் அஇஅதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தகவல் தொழிற் நுட்ப அணி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அதிமுக தகவல் தொழிற் நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன்.,
சமுக வலை தளங்களை சிறப்பாக பயன்படுத்தி கட்சிக்கு பலமாக வேண்டும் பொய்பிரச்சாரங்களை முறியடிக்க தமிழகம் முழுக்க துடிப்பான இளைஞர்கள் கொண்ட தகவல் தொழில்நுட்ப படை. உருவாக்கப்படும் அதற்காக மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது என்று பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நீலகிரி மாவட்ட செயலாளர் K R அர்ஜுணன் MP , பாராளுமன்ற உறுப்பினர் C. கோபாலகிருஷ்ணன் MP , குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு MA. MLA , மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.