March 16, 2017
தண்டோரா குழு
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் முத்துகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பிய போது மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசப்பட்டது.
தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த ஜே.என்.யூ. மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் அரிசிபாளையத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு மாணவர்கள், மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் அஞ்சலி செலுத்தினார்.
பொன். ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்திய போது திடீரென மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக கோஷமும் எழுப்பினர்கள்.
அதன் பின் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை நோக்கி காலணியை எறிந்தார். அது மீது விழுமால் தொலைக்காட்சிகளின் மைக்குகள் மீது விழுந்தது.காலணி வீசியவரைக் காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.