• Download mobile app
28 May 2025, WednesdayEdition - 3395
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொன்னூத்து அம்மன் மலைப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் – கொலையா என போலீசார் விசாரணை

February 1, 2020

கோவை துடியலூர் அடுத்துள்ள வரப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள பொன்னூத்து அம்மன் கோவிலுக்கு இன்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகம் வந்து செல்வர். இந்தநிலையில் இன்று காலை பூசாரி மற்றும் பக்தர்கள் வரும்போது மலைப்பகுதியில் தூர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக அவர்கள் வனத்துறை மற்றும் தடாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூர்நாற்றம் வீசப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் இறந்த நிலையில் கிடந்தார். அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு இறந்த பெண் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேற்கொண்டு மலை அடிவாரத்தில் விசாரணை செய்ததில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்
மலைப்பகுதியில் சுற்றித்திரிந்ததாக கூறியுள்ளனர். மேலும் இந்த மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதாலும், மாலை நேரங்களில் மது அருந்த பல பேர் இங்கு வருவதாலும் இந்த பெண் ஒருவேலை யானை தாக்கி இறந்து இருக்கலாம் அல்லது கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க