• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொது இடத்தில் சிறுநீர் கழித்தவருக்கு வினோத தண்டனை.

March 3, 2016 ww4.timesofap.com

தண்டனை என்பது ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பாக இருக்க வேண்டுமே ஒழிய அவரை மேலும் காயப்படுத்த அல்ல என்பதே உலகில் உள்ள பலரது கருத்தாக உள்ளது.

இந்நிலையில் சிறு சிறு தவறுகளுக்கு கூடப் பெரிய தண்டனைக் கூடாது என்பதை ஏற்றுக்கொள்ளும் உலகம் பெரிய குற்றங்களுக்கான தண்டனை குறித்துப் பேச மறுக்கிறது. இதனடிப்படையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரப் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ராமசுவாமி வித்தியாசமான நடவடிக்கை எடுப்பதில் பெயர்பெற்றவர்.

இவர் நேற்று முன்தினம் இவரது சகாக்களான எஸ்.ஐகள் ரமனையா மற்றும் கோத்தையா ஆகியோருக்கு ஒரு உத்தரவு கொடுத்தார். அதனடிப்படையில் இருவரும் செக்கந்தராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள சுபாஸ் சந்திரபோஸ் சிலைக்கு எதிரே உள்ள நடைபாதை அருகே காத்திருதனர்.

அந்த நடைபாதையில் சுவர் முழுவதும் யாரும் சிறுநீர் கழிக்கக்கூடாது என்பதற்காக அனைத்து மத சின்னங்களையும் வரைந்து வைத்துள்ளனர். ஆனாலும் ஒரு சிலர் அங்கேயே சிறுநீர் கழிக்கின்றனர். இதைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட எஸ்.ஐகள் ஒருவர் அங்குச் சிறுநீர் கழித்ததைப் பார்த்ததால் அவரை அழைத்து மாலை மரியாதை செலுத்தி பின்னர் அருகில்தான் கழிப்பறை உள்ளது என எடுத்துக்கூறினர்.

இதையடுத்து அங்குச் சிறுநீர் கழிக்க வருவோர் அனைவரையும் மாலை மரியாதை செலுத்தி கவுரவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, இப்படிச் செய்வதால் அவர்களுக்கு இனி இது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்ற என்ன வருவதோடு, அடுத்தவர்களையும் தடுத்து நிறுத்துகின்றனர் எனத் தெரிவித்தார். மேலும் இது தூய்மை ஹைதராபாத் திட்டத்தின் ஒரு பகுதி எனவும் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு சிக்னலில் நின்றிருத்த 20 பேரில் ஹெல்மெட் அணிந்திருந்த இருவருக்கு மட்டும் சாக்லேட் கொடுத்து கவரவம் செய்தனர். இதையடுத்து அடுத்தாலே பலர் ஹெல்மெட் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒருவரைத் தண்டித்து ஒரு செயலை செய்ய வைப்பதை விட இது போன்ற செயல்களால் விரைவில் திருத்த முடியும் எனத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க