December 7, 2020
தண்டோரா குழு
பொதுவேலை நிறுத்தத்திற்கு வியாபாரிகளிடம் கோவை மஜகவினர்ஆதரவு திரட்டினர்.
டெல்லியில் கடந்த 10 நாட்களாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் வரும் டிசம்பர் 8 அன்று விவசாயிகள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி முழு ஆதரவு அளித்து களப்பணியாற்றி வருகிறது.
அதை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட மஜக வின் வணிகர் சங்க பிரிவான MJVS மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் (பொறுப்பு) ஹாருன், அவர்கள் தலைமையில் பெரியகடைவீதி பகுதியில் வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினர்.
இதில் மாவட்ட பொருளாளர் நெளபல் பாபு, நகைகடை பிரிவு நிர்வாகிகள், மற்றும் நடைபாதை வியாபாரிகள் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.