February 27, 2018
தண்டோரா குழு
சேலம் கோட்டத்தின் நீலகிரி மலை ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்தடங்கள், ரயில்வே சிக்னல்கள், போன்ற ரயில்வே அமைப்புகள் பற்றிய தொன்மையான புகைப்படங்களை மேட்டுப்பாளையம் ரயில் அருங்காட்சியகத்திலும் நீலகிரி மலை ரயில் பெட்டிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்கள் தங்களிடம் பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்கள் இருந்தால் அவற்றை சேலம் கோட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும்,இந்த புகைப்படங்கள் பிரதி எடுத்த பின் அவை மீண்டும் உரியவர் கையில் திருப்பித் தரப்படுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேட்டுப்பாளையம் ரயில் அருங்காட்சியகத்திலும் நீலகிரி மலை ரயில் பெட்டிகளிலும் வழங்கியவர் பெயர் குறிப்பிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும்.