தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையில் மிக முக்கிய பண்டிகையானது பொங்கல் திருநாள்.தை மாதத்தில் வரும் இந்நாளில் தமிழர்கள் சூரிய பகவானிற்கு நன்றி சொல்லும் விதமாக மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக கோவை நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் 14ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.வளாகம் முழுவதும் கரும்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய இசையுடன் மண்பானையில் பொங்கல் வைத்து குலவையிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
இதில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் விஜயகுமார்,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கௌதமன், துணை தலைவர் கண்ணன், இணைச்செயலாளர் நிர்மலாதேவி, கலையரசன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்