• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள்

January 12, 2022 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறை கோவை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தொழில் நகரமான கோவையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை கடலூர் உள்ளிட்ட ஊர்களுக்கும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் மார்க்கம் செல்லும் பஸ்களும், கொடிசியா மைதானத்தில் இருந்து சேலம், திருச்சி, தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதன்படி கோவையில் இருந்து மதுரைக்கு 100 பேருந்துகள், சேலம் மற்றும் திருச்சிக்கு தலா 50 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகள் என 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து இயக்கப்படும் விரைவு பேருந்துகளில் கோவை, மதுரை, கும்பகோணம் ஆகிய மூன்று மண்டலங்களின் சேர்த்து கிட்டத்தட்ட ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், கொடிசியா மைதானம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு போதுமான இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கொரோனா பரவலை முன்னிட்டு அரசின் வழிகாட்டுதலின்படி 75 சதவீத பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பேருந்துகளில் பயணிகள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்படுவார்கள் எனவும் முககவசம் பயணிகள் அணியாத பேருந்துகளில் ஏற அனுமதி கிடையாது எனவும் கோவை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க