• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக்நிறுவனர் 12 ஆண்டுகளுக்கு பிறகு டிகிரி வாங்க போகிறார்

March 8, 2017 தண்டோரா குழு

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகும்பேர், 12 ஆண்டுகளுக்குப் பின், தனது டிகிரி படிப்புக்கான சான்றிதழை வாங்க உள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு ஹார்வர்டு கல்வி நிறுவன மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் இணையதளம் இன்று, மிகப்பெரிய சமூக ஊடகமாக, மாறி உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்து, இன்றைக்கு சுமார் 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் நிறுவனரான மார்க் ஜுகும்பேர் இன்றைக்கு, உலக பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால், அவர் தனது பட்டப்படிப்பை முழுதாக முடிக்காத நபர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஹார்வர்டு கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான மார்க், 2004ம் ஆண்டு பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்தபோதே, ஃபேஸ்புக்கை தொடங்கி, படிப் படியாக, அதன் வளர்ச்சி காரணமாக இன்று உலக பிரபல தொழிலதிபராக மாறிவிட்டார். அதனால், அவரால் படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே ஹார்வர்டு கல்வி நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில், அவரது சாதனையை பாராட்டியும், ஹார்வர்டு கல்வி நிறுவனத்திற்கு மார்க் தேடித்தந்துள்ள புகழை கருத்தில்கொண்டும் அவருக்கு, பட்டப்படிப்பை நிறைவு செய்ததற்கான சான்றிதழை தர ஹார்வர்டு நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் மே மாதத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவின்போது, மார்க் அவரது படிப்புக்கான டிகிரியை பெற உள்ளார். மேலும், அந்த விழாவில், சிறப்பு உரை நிகழ்த்தவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க