• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டவரின் வீட்டில் கை வரிசை காட்டிய கொள்ளையன் !

June 13, 2018 தண்டோரா குழு

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் RT நகர் பகுதியில் பிரேமலதா தனது சகோதரர் லோகித் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வார இறுதி நாளன்று சொந்த ஊரான கோபிச்செட்டி பாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வதாக கூறி பிரேமலதா ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துவிட்டு ஊருக்கு கிளம்பிச் சென்றுள்ளார். கோவில் சென்று வீட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய அவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது வீடே அலங்கோலமாக இருந்துள்ளது.

வாசலில் நின்றிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது வீட்டில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை 57,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றதைக் கண்டு பிரேமலதா அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து RT நகர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகரில் நான் பதிவு செய்த ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்யை பார்த்த யாரோ ஒருவர் தான் இத்திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக பிரேமலதா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் இயங்காததால் கொள்ளையர்கள் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க வாய்ப்பாக மாறியுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க