• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக பேசிய பெண் கைது

June 2, 2018 தண்டோரா குழு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மணப்பாறை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யாதேவி.இவர் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை பற்றி அவதூறாகவும் ஆபாச வார்த்தைகளிலும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதனால் பாஜக நிர்வாகிகள் பலர் சூர்யா தேவிக்கு எதிராக புகார் அளித்தனர். தென்சென்னை மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி காளிதாஸ் என்பவர் சென்னை போலீஸில் புகார் அளித்தார்.

இதையடுத்து,சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி திருச்சி பெண் சூர்யாதேவி வெளியிட்டது என்பதை கண்டறிந்தனர்.பின்னர்,வடபழனி போலீஸார் உதவியுடன் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர்.மேலும்,இவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அடிப்படையிலும் ஆபாசமாக பேசுதல் பிரிவின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க