• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேஸ்புக்கில் தகாத வார்த்தை பேசிய நபரை நாட்டை விட்டே வெளியேற வைத்த பெண் பத்திரிகையாளர்

April 12, 2017 தண்டோரா குழு

பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி வந்த நபரின் விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டு அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வைத்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பிரபலமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர் ‘ரானா அயூப்’ என்ற பெண்மணி. அவருடைய பேஸ்புக் பக்கத்திற்கு பாலியல் ரீதியாக தொடர்ந்து தகாத வார்த்தைகளால்ஒருவர் குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் ரானா அயூப் இதை பெரிய தொந்தரவாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல இது போன்ற குறுஞ்செய்திகள் தொடர்ந்து வரவே, இதற்கு ஒரு முடிவுக்கட்ட வேண்டும் என்று நினைத்தார்.

இதையடுத்து, அந்த நபர் தனக்கு பாலியல் ரீதியாக தகாத வார்த்தைகளால் அனுப்பிய குறுஞ்செய்திகளை ஸ்க்ரீன் சாட் எடுத்து “இதை தான் நான் தினம் தினம் அனுபவிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

பின்னர், சில நாட்கள் கழித்து தனக்கு மெசேஜ் அனுப்பிய நபரின் பெயர் பாலச்சந்திரன் லால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்துக்கொண்டு இருக்கிறார்.அவர் “ஷாடி அல் ரேபாய் “என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதை அறிந்த ரானா அயூப் அந்த நிறுவனத்தில் புகார் செய்தார்.இதையடுத்து, பாலச்சந்திரன் லால் பணியாற்றி வந்த நிறுவனம் அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டது.

இதனைத்தொடர்ந்து “பாலச்சந்தினுடைய விசாவும் திரும்பப்பெறப்பட்டது.அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்” என்று ரானா அயூப் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அயூபின் இந்த தைரியமான செயலை அறிந்த மக்கள் அவரை மனமார பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க