• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக்கில் இனி உங்கள் புகைப்படத்தை வேறு ஒருவர் பதிவிட முடியாது

December 20, 2017 தண்டோரா குழு

பேஸ்புக்கில் ஒருவரின் புகைப்படத்தை மற்றொரு நபர் வெளியிட்டால் சம்மந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஓன்று பேஸ்புக். கருத்துகளை பகிர்தல், நண்பர்களும் சேட்டிங் செய்தல், புகைபடங்களை பகிர்தல் என பல வசதிகள் இருப்பதால் இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் ஆரம்பத்தில் பேஸ்புக்கில்புகைப்படங்களை பகிர்ந்தால் மற்றவர்கள் அதனை பகிர்வது எளிதாக இருந்தது. தற்போது பயனாளர்களின் பாதுக்காப்பிற்காக பேஸ்புக் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது பேஸ்புக் நிறுவனம் ஒருவரின் புகைப்படத்தை மற்றொரு நபர் வெளியிட்டால் சம்மந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்தும் வசதி அறிமுகம் செய்யஉள்ளது.

அதன்படி ஒருவரின் பேஸ்புக் ப்ரோபைல் புகைப்படங்களையும் (( profile picture )) மற்றவர்கள் பதியேற்றம் செய்யும் புகைப்படங்களையும் முக அடையாளங்களை கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் அறிய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்மூலம் பேஸ்புக் பயனாளி ஒருவரின் புகைப்படத்தை, அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியே மற்றோரு நபர் பதிவிட்டால், குறிப்பிட்ட அந்த பயனாளிக்கு தெரிவிக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தால் ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை அனுமதியின்றி மற்றவர்களால் பதிவிடுவதை தவிர்க்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் படிக்க