June 26, 2021
தண்டோரா குழு
பேரூர் ஆற்றுவழி பட்டி விநாயகர் கோவில் அருகில் 150 ஆண்டுகால பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது.நேற்று,இப்பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு பொக்லைன் மீது விழுந்த மரம், சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து,பேரூர் தாசில்தார் ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும்,ரோட்டின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த, தொண்டாமுத்தூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு ஊர்தி குழுவினர் சாலையின் குறுக்கே விழுந்து இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்.