• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர செய்தல் தொடர்பான முதலாவது கருத்துக்கேட்பு கூட்டம்

September 14, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் 121 நகராட்சிகள் இருந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு புதியதாக 29 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அறிவித்தார்.இதன் காரணமாக 121 நகராட்சிகளாக இருந்தது 150 ஆக உயர்ந்தது.

புதியதாக அறிவிக்கப்பட்ட நகராட்சியில் கோவை மாவட்டத்தில் கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி,மதுக்கரை ஆகிய 4 நகராட்சிகள் அடங்கும்.இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர செய்தல் தொடர்பான முதலாவது கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.இதில் 4 நகராட்சியை சேர்ந்த முன்னால் கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர், கிராம ஊராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் முன்னால் கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர் மேலும் கிராம ஊராட்சி அலுவலர்கள் அவர்களது கருத்துக்களை பரிமாறினர்.

மேலும் படிக்க