January 24, 2020
ஒருங்கினைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவையில் 168 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார். கோவை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 61.2 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணியை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ரூபாய் 168 கோடி மதிப்பில் தங்குமிடம் , உணவகம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைய உள்ளதாகவும் இதன் மூலம் கோவை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவித்தார். மேலும் வெள்ளலூர் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குப்பை கிடங்கு பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இங்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கூறினார். இங்குள்ள குப்பைகளை மேலாண்மை செய்ய புதிய யுக்தி கையாண்டு வருவதாகவும் தெரிவித்தார்.