• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேருந்துகளை சிறை பிடித்து மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டம்

November 14, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் குறித்த நேரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நல்லூர் பாளையம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வழித்தடம் எண் ஆறு மற்றும் வழித்தடம் எண் 105 ஆகிய இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் இரண்டு பேருந்துகளும் குறித்த நேரத்துக்கு இயக்கப்படாமல் பொதுமக்களும் மாணவ மாணவிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.இதனை கண்டித்து இன்று திடீரென நல்லூர் பாளையம் பகுதியில் பேருந்துகளை சிறை படித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிக்கு செல்வதற்கு எட்டு மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு மணி நேரம் தாமதமாகவும் மாலையில் 4:00 மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக வருவதும் சில சமயங்களில் பேருந்துகள் வருவதில்லை எனயும் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள் உரிய தீர்வு எட்டும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என அறிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக சூலூர் கோட்ட அதிகாரிகள் மற்றும் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.இதுவரை வருவாய் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் வராத நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க