May 9, 2021
தண்டோரா குழு
கோவையில் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் இனிப்புகள் வழங்கினார்.
பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.அதன்படி கோவை மாவட்டத்தில் 115 வழித்தடங்களில் 369 சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வந்ததில், கூடுதலாக 70 பேருந்துகள் என மொத்தம் 447 பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
இந்த 447 பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள முடியும். இதை கொண்டாடும் வகையில், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் பேருந்துகளில் பயணம் செய்து இனிப்புகள் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ரொம்ப சந்தோஷமாக உள்ளது. பெண்களுக்கு இலவச பயணம் மேற்கொள்ள சட்டம் கொண்டு வந்த தமிழக முதல்வர் தளபதிக்கு நன்றி, தினமும் வேலைக்கு போகிறவர்களுக்கு இது இலவச பயணம் மிகவும் பயணுள்ளதாக உள்ளதாக கூறியவர், இதனால், பொதுமக்கள் அனைவரும் சந்தோசப்படுகின்றனர்.
நாங்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினோம் என்றவர், இதன் மூலம் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பெருமைப்படுகின்றனர்.இலவசம் என்பது சாதாரண விசயம் அல்ல. எவ்வளவு போராட்டத்திற்கு பிறகு, முதல்வர் பதவியில் அமர்ந்த தளபதி, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றார் , நீங்கள் தான் நிரந்தர முதல்வர் என்றார்.
மேலும், பால் விலை குறைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கொரோனா போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வரும் என்று நம்புகின்றோம் என்று கூறினார்.