• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேருந்தா? புகை வண்டியா? மாநகரம் முழுவதும் புகையைக் கக்கிச் செல்லும் அரசு பேருந்துகள்

June 2, 2018 மஞ்சு தாமோதரன்

தமிழகத்தில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில்,கோவை மண்டலத்தில் சுமார் 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.வருவாயில் கோவை மண்டலம் 2-ம் இடத்தில் உள்ளது. இவற்றில் 20 முதல் 30 சதவீத பேருந்துகள் இயக்கத்திற்கு தகுதியற்றவைகளாக இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் பராமரிப்பு குறைபாடு காரணமாக இம்மண்டலத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் புகையை அதிகம் வெளியேற்றி வருகின்றன.

இப்பேருந்துகளில் இருந்து வெளியேற்றப்படும் அதிகமான கரும்புகையால் சாலையே புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.இதனால்,காற்று மாசுபாடு மட்டுமல்லாமல் சாலையில் செல்பவர்களுக்கு சுவாச கோளாறு இரும்பல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும்,எரிபொருள் சிக்கனத்திற்காகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பி2, பி3 வகைகளைச் சேர்ந்த நவீன பேருந்துகள் அதிகம் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.பழைய பேருந்துகளைக் காட்டிலும் குறைவான புகையை இப்பேருந்துகள் வெளியேற்றும்.எனினும்,ஆரம்பத்தில் சரியாகச் சென்று கொண்டிருந்த இப்பேருந்துகள் தற்போது மாநகரம் முழுவதும் புகையைக் கக்கிச் செல்லும் புகை வணடியாக மாறிவிட்டன.

இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.பொதுவாக அனைத்து வாகனங்களுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை வாகன புகை பரிசோதனை செய்ய வேண்டும்.இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக புகை வந்தால் அதிகாரிகள் மூலம் உரிய கட்டணம் வசூலிக்கப்படும்.பொதுவாக பின்பற்றப்படும் இந்த நடைமுறை அரசு பேருந்துகள் மற்றும் ஒரு சில தனியார் பேருந்துகளில் பின்பற்றப்படுவதில்லை.இதனால் அதிக அளவில் காற்று மாசடைந்து வருகிறது.மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பல முறை அறிவிப்பு விடுக்கப்பட்டும் இந்த பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க முயற்சி செய்யவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில்,

“வாகனங்கள் சரியாக பராமரிக்காத காரணத்தால் தான் இன்ஜின் கோளாறு காரணமாக கரும்புகை ஏற்படுகின்றது.இது பேருந்துகளில் மட்டும் அல்லாமல் இருசக்கர வாகனங்களிலும் ஏற்படுகின்றது. தங்கள் வாகனங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பதே இதற்கு காரணம்.

அரசு பேருந்துகளில் இருந்து வெளிவரும் கரும்புகைக்கு முக்கிய காரணம் சரியான பராமரிப்பு இல்லாதது தான்.அந்த மாதிரியான பராமரிக்காப்படாத பேருந்துகள் “ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தில்” 10 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது.அவை மானியதில் குறைந்த விலையில் வாங்கப்பட்ட பேருந்துகள்.அந்த பேருந்துகளில் எந்த பராமரிப்பும் செய்யப்படவில்லை.அதனால் தான் அந்த பேருந்துகளில் இருந்து கரும்புகை அதிகமாக வருகிறது.

காற்று மாசுபாடு ஏற்படுவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.பத்து வருடங்களுக்கு முன் JNURL திட்டத்தில் வாங்கப்பட்ட இந்த பேருந்துகளை தடை செய்ய வேண்டும்.இல்லையெனில் பொதுமக்களுக்கு இந்த கரும்புகை பெரும் ஆபத்தாக மாரிவிடும்.

அதைபோல் அரசு பேருந்துகள் வாகன பரிசோதனைக்கு செல்லும் போது பெயருக்காக எல்லாம் சரியாக இருப்பது போல் காட்டுகின்றன.அதை வட்டார போக்குவரத்து அலுவலர் சரியாக சோதனை செய்யாமல் அலட்சியமாக விட்டு விடுகிறார்.இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான்.வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் இருக்காமல் சாலையில் வந்து பார்க்க வேண்டும்.அப்போது தான் அவருக்கு அரசு பேருந்துகளின் நிலைமை புரியும்.இது தொடர்பாக அவர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பொழுது தான் கரும்புகையல் ஏற்படும் சுவாச கோளாறு நோய் மற்றும் காற்று மாசுபடுதலையும் கட்டுபடுத்த முடியும்” என்று கூறினார்.

இது தொடர்பாக மத்திய மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர் உதயகுமார் கூறுகையில்,

“கரும்புகை தொடர்பாக நுகர்வோதிட்டமிருந்து புகார் ஏதும் வந்தால் அது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும்” என்று கூறினார்.

மேலும் படிக்க