April 17, 2018
தண்டோரா குழு
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன்? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவிகளிடம் மதிப்பெண் ஆசை காட்டி பாலியல் பேரம் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி நேற்று கைது செய்யப்பட்டார்.இரண்டாவது நாளாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில்,இது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் உத்திரவிட்டார்.
இந்நிலையில்,சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின்,
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் விசாரிக்க உத்தரவிட்டது ஏன்? துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில்,திடீரென ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டதில் குழப்பம் இருப்பதாக கூறினார்.