April 17, 2018
தண்டோரா குழு
பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மாணவிகளிடம் மதிப்பெண் ஆசை காட்டி பாலியல் பேரம் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி நேற்று கைது செய்யப்பட்டார்.இதையடுத்து இரண்டாவது நாளாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில்,இது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று உத்திரவிட்டிருந்தார்.
இந்நிலையில்,கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் அழைப்பு விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.