July 12, 2018
தண்டோரா குழு
நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,கருப்பசாமி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்,செப். 9-ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் அதுவரை யாருக்கும் ஜாமின் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும்,நிர்மலாதேவி விவகாரத்தில் செப். 10ம் தேதிக்குள் சிபிசிஐடி இறுதியான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்,இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால்,குற்றவாளிகள் மூவரையும் சிறையில் இருந்து விடுவிக்காமல் விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.