• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேராசிரியர் உள்பட 2 பேர் தற்கொலை

February 24, 2022 தண்டோரா குழு

அன்னூர் மூலகுரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.‌ கூலி தொழிலாளி. இவரது மனைவி காயத்ரி (24).இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லாத நிலையில் காயத்ரி மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே காயத்ரிக்கும் அன்னூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவருடன் காயத்ரி வெகுநேரம் செல்போனில் பேசி வந்துள்ளார்.‌ இதை காயத்திரியின் குடும்பத்தினர் கண்டித்தனர்.‌ இதனால் விரக்தி அடைந்த காயத்ரி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகிர் (27). இவர் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.இவருக்கு 10 நாட்களுக்கு முன் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டது.‌ சிகிச்சை முடிந்த பின்னரும் இவரது உடல்நிலை தொடர்ந்து பலவீனமாக இருந்து வந்துள்ளது.இதனால் விரக்தியில் இருந்த அபுதாகிர் கோவை காரமடை வந்துள்ளார். கட்டாஞ்சி மலைப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் அபுதாகிர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.‌ அப்போது இவர் கட்டாஞ்சி மலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். தனக்கு பிடித்த இடத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் அவர் வந்திருப்பதாக தெரிகிறது. காரமடை போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்க