June 15, 2018
தண்டோரா குழு
சிறையில் இருக்கும் பேரறிவாளனை கருணை கொலை செய்து விடுமாறு மத்திய,மாநில அரசுகளிடம் வலியுறுத்த உள்ளதாக அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு,26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்,முருகன்,சாந்தன்,ஜெயகுமார்,ராபர்ட் பயஸ்,ரவிச்சந்திரன் மற்றும் நளினி ஆகிய ஏழு பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.இந்நிலையில்,குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறும்போது,
பேரறிவாளனை விடுதலை செய்ய முடியாவிட்டால் அவரை கருணைக் கொலை செய்யுங்கள்.தினம் தினம் துடிப்பதை விட மத்திய அரசே கருணை கொலை செய்து விடலாம்.இந்த விஷயத்தில் மத்திய அரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்.பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.திடீரென இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடு எப்படி வந்தது.எங்களை குடும்பத்துடன் கருணை கொலை செய்யுமாறு மத்திய அரசிடம் மனு கொடுக்க உள்ளோம் என கூறியுள்ளார்.