• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேண்டுக்குள் பாம்பு புகுந்தது தெரியாமல் பைக் ஓட்டிய வாலிபர்!

June 12, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் வாலிபர் ஒருவரது பேண்டில் பாம்பு ஏறியது கூட தெரியாமல் அவர் நெடுந்தூரம் பைக் ஓட்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் வீரேஷ் காதேமணி. இவர் பைக்கை ஒரு மரத்தடியில் நிறுத்தியுள்ளார் அப்போது 2 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று பைக் இஞ்சினில் ஏறியுள்ளது.வீரேஷ் சந்தைக்கு செல்வதற்காக பைக்கை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது அந்த பாம்பு இஞ்சின் சூடு தங்காமல் வெளிய வந்து வீரேஷ்யின் பேண்டுக்குள் நுழைந்துள்ளது.

இதனை அறியாத வீரேஷ் காலில் தண்ணீர் ஏதாவது பட்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றயுள்ளார். எனினும், காலில் ஏதோ ஊருவதைக் கண்ட வீரேஷ் பைக்கை நிறுத்தி என்வென்று உற்றுக் கவனித்துள்ளார். அப்போது அவரது பேண்டில் பாம்பின் வால் பகுதி கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே, என்ன செய்தவதென்று தெரியாமல் மின்னல் வேகத்தில் பைக்கை நிறுத்தி அருகிலிருந்த கடைக்குள் சென்று பேண்டை கழற்றி வீசியுள்ளார். அப்போது அந்த பேண்டிலிருந்து 2 அடி நீளம் கொண்ட பாம்பு வெளியே வந்தது. அதைப்பிடிக்க பொதுமக்கள் முயற்சித்தனர் ஆனால் அந்த பாம்பு அருகிலிருந்த கழிவுநீர் தொட்டிக்குள் புகுந்து தப்பித்துவிட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை நிலவியது.

மேலும் படிக்க