March 28, 2021
தண்டோரா குழு
பெடிலைட், ஃபெவிக்ரியேட்-ன் ஆதரவின் கீழ், இந்தியா முழுவதிலும் பரவலாக அனைத்து நகரங்களிலும் நடைபெற்ற அகில இந்திய அறிவியல் போட்டித் தொடரான முதல் மெய்நிகர் ஃபெவிக்ரியேட் ஐடியா லேப் போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்தது.
சென்னையிலுள்ள சனா மாடல் ஸ்கூல்-ஐ சேர்ந்த டி. சையத் இப்ராஹிம், தனது மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்ற கருப்பொருளிலான தனது ப்ராஜெக்ட்டிற்கு பரிசைத் தட்டிச் சென்றார். அதேபோல், பஞ்சாப்பின் புத்தா தால் ப ப்ளிக் ஸ்கூலை சேர்ந்த குர்நாஸ் கௌர் ஆனந்த் மற்றும் அகமதாபத்தைச் சேர்ந்த திவான் பல்லுபாய் ப்ரைமரி ஸ்கூலை சேர்ந்த அய்யன்.ஏ. அஜ்மெரி ஆகியோர் எதிர்காலத்திற்கு அவசியமான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி மூலம் சாத்தியமாக்கும் தங்களது ப்ராஜெக்ட்டிற்காக பரிசுகளை வென்றிருப்பதாக அறிவித்திருக்கிறது பிடிலைட்.
மெய்நிகர் உலகிற்கு தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.இணையம் வாயிலான. கல்வியானது வழக்கமான வகுப்பறை கல்விக்கற்றல் அனுபவத்தின் தனிப்பட்ட தன்மையை பிரதிபலிப்பது என்பது உண்மையில் கடினம்.இந்த இடைவெளியைக் குறைக்க, ஃபெவிக்ரேட் ஐடியா லேப், அதன் ஆல் இண்டியா சயின்ஸ் ஆன்லைன் போட்டி மூலம் இளம் விஞ்ஞானிகள் தங்களது திறனை முழுமையாக ஆராய, உணர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்கியது.”புதிதாக முயற்சிப்பதன் மூலம் கற்றல்” அணுகுமுறையை ஊக்குவிப்பதே இதன் முக்கிய அம்சமாக இருந்தது, இதன் மூலம் இளைய தலைமுறையினர் கோட்பாடுகளையும்,அவற்றின் உண்மையான செயல்பாட்டு முறைகளையும் புரிந்து கொள்ளவும் உதவும் என்பதே இதன் சிற்ப்பம்சமாகும்.
மார்ச் 2021-ல் நடைபெற்ற பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில்,போட்டியில் கலந்து கொள்ள தகுதிபெற்ற 36 ப்ராஜெக்ட்கள், இப்போட்டியின் நடுவர்களின் முன் மெய்நிகர் முறையில் முன் வைக்கப்பட்டன.இந்த நடுவர்கள் குழுவில் நாசா, இஎஸ்ஏ மற்றும் ஜி.சி.டி.சி விண்வெளி முகாம்களுக்கான தூதர், டாக்டர் ஸ்ரீமதி கேசன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேரண்ட் சர்க்கிள் திருமதி நளினா மற்றும் மூத்த துணைத் தலைவர், பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் திரு. விவேக் அப்ரோல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர், இளைய தலைமுறையினர் வழங்கிய ப்ராஜெக்ட்களில், அவற்றுக்குப் பின்னால் அவர்களுக்கு உள்ள உண்மையான புரிதல் மற்றும் சிந்திக்கும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இது குறித்து பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஆர்ட் ஸ்டேஷனரி ஃபேப்ரிக் பிரிவின் மூத்த துணைத்-தலைவர் விவேக் அப்ரோல் கூறுகையில்,
ஃபெவிக்ரியேட்டில் நாங்கள் முயற்சி செய்வதன் மூலம் கற்றலுக்கான சக்தியைப் பெறமுடியுமென உறுதியாக நம்புகிறோம். முதன்முதல் ஃபெவிக்ரியேட் ஐடியா லேப் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை அளிக்கும் நோக்கத்துடன் ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது, வீட்டில் இருந்தப்படியே இருந்து கற்கும் குழந்தைகளுக்கு, அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கும் அவர்களின் கற்பனையை பலதளங்களில் விசாலமானதாக விரிவுபடுத்துவதற்கும் உதவும் ஒரு தளமாக அமைந்திருக்கிறது. இந்த முயற்சியில் நாங்கள் பல உற்சாகமளிக்கும் யோசனைகளையும், செயல்முறை திட்டங்களையும் பார்த்தோம். இம்முயற்சியில் வெற்றிப் பெற்ற அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.
நாசா, இஎஸ்ஏ மற்றும் ஜிசிடிசி விண்வெளி முகாம்களுக்கான தூதர் டாக்டர் ஸ்ரீமதி கேசன் கூறுகையில்,
ஃபெவிக்ரியேட் ஐடியா லேப் உடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அறிவியல், விஞ்ஞானம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மீது ஆர்வமுள்ள, திறமையுள்ள இளைய தலைமுறையினரை அடையாளம் காண்பது என்பது மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கிறது. இந்த போட்டி அறிவியல் மற்றும் நுணுக்கமான வடிவமைப்பு ஆகிய இரண்டும் ஒன்றிணைந்திருக்கும் ஒரு மிகச் சிறந்த தளமாக இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன். வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.
இந்த மாபெரும் சவால் 2020 அக்டோபர் மாதத்தின் நடுவில் தொடங்கி, 2021 ஜனவரி 10-ம் தேதி 2021 வரை தொடர்ந்தது. 5-9 வயது மற்றும் 9-14 வயதுக்குட்பட்ட பங்கேற்பாளர்களுக்கு தலா இரண்டு தலைப்புகள் வழங்கப்பட்டன.