• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெள்ளேபாளையம் கிராமத்தில் கலெக்டர் தலைமையில் 20ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

April 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், பெள்ளேபாளையம் கிராமத்தில் வரும் 20ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அக்கிராமத்தில் கோவை வடக்கு வருவாய் கோட்ட அலுவலர் இன்று (ஏப்ரல் 1ம் தேதி) காலை 10.30 மணியளவில் பெள்ளேபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் முன் மனுக்களை பெற உள்ளார்.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கோவை வடக்கு வருவாய் கோட்ட அலுவலரிடம் கொடுக்கலாம். மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க