January 9, 2021
தண்டோரா குழு
வருகின்ற தேர்தலில் பெரும்பான்மையான பாஜக உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப தயாராக உள்ளதாக முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் கர்னல் பி.பி.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் பாஜகவின் ராணுவ பிரிவின் மாநகர மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ராணுவ பிரிவின் மாநில தலைவர் கர்னல் பி.பி.பாண்டியன்,
தமிழகத்தில் ராணுவத்துக்கு என நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது பாஜகவில் மட்டுமே,வருகின்ற தேர்தலில் பாஜகவின் பெரும்பான்மையான உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவின் மாநில செயலாளர் டி.வி. பாஸ்கரன் மற்றும் கோவை வடக்கு மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணி ,ராஜன், காரமடை மேற்கு மண்டல தலைவர் வினோத் முன்னிலையில் புதிய தலைவர்களாக மாநகர் மாவட்ட தலைவர் கணேஷ், துணைத் தலைவர்களாக ராஜேந்திரன் கணேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதில் பாஜக தொழில் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டு புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.