March 7, 2018
தண்டோரா குழு
பெரியார் சிலை விவகாரம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலை அகற்றம் குறித்த பதிவை எனது அட்மின் அனுமதி இல்லாமல் வெளியிட்டுள்ளார். எனக்கு தெரியாமல் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட அட்மினை நீக்கிவிட்டேன் என்று ஹெச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.அந்த பதிவு வெளியான போது விமானத்தில் இருந்தேன் என்றும் பின் அதை பார்த்ததும் நீக்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், பெரியார் சிலை விவகாரம் குறித்து யார் மனதாவது புண்பட்டிருந்தால் இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.