November 26, 2020
தண்டோரா குழு
பெரியார் சிலையை உடைப்பேன் என சமூகவலைதளங்களில் பதிவிட்ட நபரை கோவை செட்டிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவர் தனது வாட்ஸ்அப் குழுவில் பெரியார் சிலையை உடைப்பேன் என பதிவிட்டு அதை சமூக வலைதளங்களிலும் பரப்பி வந்ததாக தெரிகிறது. இதைஅடுத்து அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் இதுகுறித்து மனோகரனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் பிரபுவை மனோகரன் கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பிரபு கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மனோகரனை அழைத்து விசாரித்து உள்ளார்கள் விசாரணையில் இந்து பாரத் சேனா அமைப்பின் கோவை மாவட்ட தலைவராக மனோகரன் இருப்பது தெரியவந்துள்ளது.மேலும் பெரியார் குறித்து வாட்ஸ்அப் குழுவிலும் சமூக வலைதளங்களிலும் செய்தி பரப்பியது உண்மை என தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.