March 6, 2018
தண்டோரா குழு
பெரியார் சிலையில் கைவைப்பது தேன்கூட்டில் கை வைப்பதை போன்றது என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
திரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ள கருத்து தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும்.பெரியார் சிலையில் கைவைத்தால் தேனீக்கூட்டில் கை வைத்த கதையாகிவிடும் எனக் கூறியுள்ளார்.