• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் அருகே நெல்லை கண்ணன் கைது

January 1, 2020 தண்டோரா குழு

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது
பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனையடுத்து, நெல்லை கண்ணன் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், இன்று நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை அருகில் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பெரம்பலூர் தனியார்விடுதியில் தங்கியிருந்த நெல்லைக் கண்ணனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க