May 24, 2018
தண்டோரா குழு
உத்திரப்பிரதேச மாநிலம் வாரனாசி பகுதியில் துர்காகுண்டம்பகுதியில் வசித்து வந்தவர் அமராவதி தேவி. அவரது கணவர் தயாபிரசாத் கஸ்டம்சில் பணியாற்றினார்.சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்துவிட்டார்.
அவர் இறந்த பிறகு அவராவதி தேவிக்கு பென்ஷன் பணம் வந்துகொண்டிருந்தது.இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளார்.ஆனால் அவரது மகன்கள் அமராவதி தேவியின் உடலை சடலம் செய்வதற்கு பதிலாக அவரது உடலுக்கு வேதிப்பொருட்களை பூசி பாதுகாத்துவந்தனர்.
மாதந்தோறும் அமராவதி தேவியின் கையெழுத்தை போலியாக போட்டு பென்ஷன் பணத்தை வாங்கிவந்தனர்.இதற்கிடையில், அமராவதி தேவியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அவரது பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.இதையடுத்து, அங்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அமராவதி தேவி ஐந்து மாதங்களுக்கு முன்பு இறந்ததும் பென்ஷன் பணத்திற்காக அவரது மகன்கள் அவரது உடலை தகனம் செய்யாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, அமராவதி தேவியின் உடலை கைப்பற்றி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சமபவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.