• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் !

June 23, 2023 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் –சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

தமிழகத்தில் தனியார் பேருந்தை ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் என்று பலரிடம் பாராட்டு பெற்றவர் ஷர்மிளா (வயது 24). இந்த நிலையில் தி.மு.க எம்.பி., கனிமொழி,இன்று காலை பேருந்தில் ஏறி பயணித்ததுடன், பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை பாராட்டினார்.

இது குறித்து ஷர்மிளா கூறுகையில்:-

‘கனிமொழி என்னை வந்து பாராட்டினார். அவர் டிக்கெட் எடுத்து தான் பேருந்தில் பயணித்தார். கண்டக்டர் பயணிகளிடம் மரியாதைக் குறைவாக பேசினார். அவரிடம் மரியாதையாக பேசுமாறு அறிவுறுத்தினேன். பிறகு, பேருந்து உரிமையாளர் என்னிடம், நீ
பிரபலமாகுவதற்காக இதெல்லாம் செய்வாயா எனக் கூறி பணியில் இருந்து விலகுமாறு கூறினார்’ என்றார்.

இதற்கிடையில், ஓட்டுநர் ஷர்மிளாவை பணியை விட்டு விலக நான் சொல்லவில்லை” என தனியார் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க