March 16, 2018
தண்டோரா குழு
பெண் பத்திரிகையாளரை பார்த்து நீங்க ஆழகாக இருக்கிறீர்கள் எனக் கூறி அமைச்சர் விஜயபாஸ்கர்சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டம் முடிந்து வெளியே வந்துள்ளார்.எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க அவரிடம், பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
ஆனால் அவர், கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களது ஸ்பெக்ஸ் அழகாக உள்ளது’ எனக் கூறியுள்ளார். பின்னர்’எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளை, கட்சி மேலிடம் அறிக்கையாக வெளியிடும்’ என்று சொல்லிச் சென்றுள்ளார். இதற்கிடையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பெண் செய்தியாளரிடம் பேசும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.